வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2016 (09:51 IST)

தெரியாமல் செய்து விட்டேன்; மன்னித்து விடுங்கள் : கதறும் ராம்குமார்

சுவாதியை கோபத்தில் தெரியாமல் கொலை செய்து விட்டேன், என்னை மன்னித்து விடுங்கள் என்று கொலையாளி ராம்குமார் மருத்துவமனை ஊழியர்களிடமும், போலீசாரிடமும் கதறி அழுததாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில், செங்கோட்டையை ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். தன் காதலை ஏற்காததாலும், தன் உருவத்தை பற்றி இழிவாக பேசியதாலும் சுவாதியை கொலை செய்தேன் என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.  
 
கைது முயற்சியின் போது, தனது கழுத்தை அறுத்துக் கொண்ட ராம்குமாருக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் சென்னை கொண்டுவரப்பட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  
 
அவர் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவர் போலீசாரிடம் அவ்வப்போது வாக்குமூலம் அளித்து வருகிறார். 
 
இந்நிலையில், ராம்குமார் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் போலீசாரிடம் “என்னை தேவாங்கு என்று கேலி செய்த சுவாதியின் வாயில் வெட்ட வேண்டும் என்றுதான் ரயில்நிலையம் சென்றேன். கொலை செய்யும் நோக்கம் இல்லை. ஒரு முறைதான் வாயில் வெட்டினேன். அப்போது அரிவாள் சதைக்குள் இறங்கி மாட்டிக் கொண்டது. அதை எடுக்க என்னால் முடியவில்லை.
 
அங்கிருந்த பொதுமக்கள் என்னை அடித்து நொறுக்கி விடுவார்கள் என்ற பயத்தில் அரிவாளை வேகவேகமாக உருவ முயற்சித்தேன். அதில்தான் கூடுதலாக வெட்டுபட்டு சுவாதி உயிர் போயிருக்கும் என்று நினைக்கிறேன். இது தெரியாமல் செய்த தவறு. என்னை மன்னித்து விடுங்கள்” என்று கண்ணீருடன் கதறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.