1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (13:51 IST)

ஜெல்லி மீன்களால் ராமேசுவரம் கடல் பகுதியில் மக்களுக்கு ஆபத்து

ஜெல்லி மீன்களால் ராமேசுவரம் கடல் பகுதியில் மக்களுக்கு ஆபத்து

கடந்த சில மாதங்களாக ராமேசுவரம் கடல் பகுதிகளில் ஜெல்லி மீன்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.


 



 


ராமேசுவரம் கடற்கரையை கண்டு ரசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ராமேசுவரம், பாம்பன் மற்றும் தனுஷ்கோடி கடல் அலைகளின் சுழல்கள் மிகவும் ஆபத்தானவை.

மணல் படுகைகள், சகதி, பாறைகள் மற்றும் ஆழமான பள்ளங்கள் அமைந்துள்ளதால் இங்கு கடலில் குளிப்பவர்கள் நீரில் மூழ்கும் அபாயங்கள் அதிகமாக உள்ளன. ராமேசுவரம் கடல் பகுதியில் ஜெல்லி மீன்கள் அதிகமாக காணப்படுவதால் அங்கு கடலில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ராமேசுவரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளுக்கு ஜெல்லி மீன்கள் இனப் பெருக்கத்துக்காக வரத் தொடங்கியுள்ளன. இதனால் இந்த கடற் பகுதியின் கரையோரங்களில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளை ஜெல்லி மீன்கள் தாக்கும் அபாயம் உள்ளது. ஜெல்லி மீன்கள் மனிதனை தாக்கினால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஒவ்வாமையின் காரணமாக மரணம் கூட நிகழலாம். இறந்து போன ஜெல்லி மீன்களை மனிதர்கள் தொட்டால் கூட அரிப்பு ஏற்படும்.

இதனால் சுற்றுலாப் பயணிகள் ஜெல்லி மீன்கள் அதிகம் உள்ள கடற்கரை பகுதிகளில் குளிக்க தடை விதிப்பதுடன் அறிவிப்புப் பலகைகளை அதிகப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்