வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2015 (16:00 IST)

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்த திட்டம்

இலங்கை சிறைகளில் உள்ள 29 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி டிசம்பர் 5ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.


 
 
இதுகுறித்து இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
 
மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் இன்று விசைப்படகு மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்திய-இலங்கை மீனவர்களுக்கிடையிலான 4ம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தக்கோரியும், இலங்கை சிறைகளில் உள்ள 29 மீனவர்களையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி டிசம்பர் 5ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை கண்டிக்காமல் இருக்கும் மத்திய அரசின் அலட்சிய போக்கை கண்டிக்கும் விதமாக மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்த ராமேஸ்வர மீனவர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர்.