Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திமுகவில் இணையும் ராமராஜன்?


Abimukatheesh| Last Updated: வியாழன், 5 ஜனவரி 2017 (16:58 IST)
ஆனந்தராஜ் அதிமுகவில் இருந்து விலகியதை அடுத்து தற்போது மக்கள் நாயகன் ராமராஜனும் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 
ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதனால் அதிமுக சிலர் அதிருப்தியில் இருந்தனர்.
 
அந்த வகையில் ஆனந்தராஜ் அதிமுகவில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து அதிமுகவின் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் விலகினார். இந்நிலையில் தற்போது இந்த வரிசையில் ராமராஜனும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
அதோடு திமுகவில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ராமராஜன் ஸ்டாலின் புகழ் பாடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :