வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2016 (13:06 IST)

உடுமலை ஜாதிய கொலை: தெறித்து ஓடிய ராமதாஸ்

உடுமலை ஜாதிய கொலை: தெறித்து ஓடிய ராமதாஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜாதி மாறி காதல் திருமணம் செய்த இளம் தம்பதியினர் மீது மூன்று பேர் கொண்ட கும்பல் தக்குதல் நடத்தியது. இதில் கணவர் பரிதாபமாக உயிரழந்தார்.


 
 
ஜாதி வெறியால் நிகழ்த்தப்பட்ட இந்த ஆணவ கொலை தமிழகத்தில் பெரும் அதிர்வலைகலை ஏற்படுத்தியது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் யுகத்தில் வாழும் இந்த காலத்தில் ஜாதிய வெறியால் நடத்தப்பட்டிருக்கும் இந்த கொலை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
பல்வேறு கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கல்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஜாதிய கொலை குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூற மறுத்து விட்டார் அவர்.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை உடுமலை அருகே ஜாதி வெறியால் இளம் தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தியதில் கணவர் உயிரிழந்தார். தமிழகத்தில் சமீபகாலமாக ஜாதிய கொலைகள் அதிகரித்து வருகிறது, இது பற்றி ராமதாஸின் கருத்தை கேட்டார் பத்திரிக்கையாளர்.
 
ஆனால் அது பற்றி கருத்து கூற மறுத்துவிட்டார் ராமதாஸ். இவ்வளவோ முக்கியமான விஷயம் சொல்லி இருகேன் அத போடுங்க, இது முக்கியமில்லை என கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.
 
ஏற்கனவே ராமதாஸின் பாமக மீது ஜாதிய கட்சி என்ற பெயர் உள்ளது பொதுமக்கள் மத்தியில். இந்நிலையில் தன்னுடைய மகன் அன்புமணி ராமதாஸை பாமக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவித்து விட்டு தற்போது அவர் ஜாதிய கொலை குறித்து கேள்விக்கு பதில் கூறாமல் அது முக்கியமான விஷயம் இல்லை என்ற தொனியில் அவர் எழுந்து சென்றது அவர் மீதான விமர்சனங்களுக்கு மேலும் வலு சேர்க்கிறது.
 
சமூக வலைதளங்களில் ராமதாஸின் இந்த செயல் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.