Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிசாசுகள் குடியேற பேய்கள் வெளியேறுகின்றன - யாரை சொல்கிறார் ராமதாஸ்?

செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (18:25 IST)

Widgets Magazine

தலைமை செயலக அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக பதவி விலகும் விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின், அவரது தோழி சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது, அவர் தமிழக முதல்வராகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்த அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக தங்கள் பதவியிலிருந்து விலகி வருகிறார்கள். தமிழக அரசின் சிறப்பு ஆலோசகராகவும், ஜெ.விற்கு நெருக்கமாகவும் திகழ்ந்த ஷீலா பாலாகிருஷ்ணன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
இந்நிலையில், முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி பதவியில் இருந்து சாந்த ஷீலா நாயர் இன்று காலை தனது பதவியிலிருந்து வெளியேறினார். சொந்த பிரச்சனை காரணமாக, அந்த பதவியிலிருந்து வெளியேறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
சசிகலா முதல்வராகும் சூழ்நிலையில், தலைமை செயலக அதிகாரிகள் இப்படி ஒருவர் பின் ஒருவராக வெளியேறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “ பிசாசுகள் குடியேறுவதற்காக பேய்கள் வெளியேறுகின்றன” என கூறியுள்ளார்.Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அப்பல்லோவில் சசிகலா குடும்பதினரை அனுமதித்த மருத்துவர்கள் மற்றவர்களை அனுமதிக்காதது ஏன்?

அப்பல்லோ மருத்துவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியது ஒரு திட்டமிட்ட நாடகம் என பாமக ...

news

சசிகலா முதல்வராவது கஷ்டம்; சட்ட சிக்கல் உள்ளது: வழக்கறிஞர் விளக்கம்

சசிகலா முதல்வராவதில் மூன்று விவகாரங்களில் சட்ட ரீதயாக சிக்கல்கள் உள்ளதாக வழக்கறிஞர் ...

news

சசிகலா முதலமைச்சர் ஆவது நிச்சயம் - செங்கோட்டையன் பேட்டி

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தமிழக முதல்வர் ஆவதை யாரும் தடுக்க முடியாது என அதிமுக ...

news

லாபத்திற்காக 2 ஆயிரம் பெண்களின் கர்ப்பபை அகற்றம்

கர்நாடக மாநிலம் காலபுரகி மாவட்டத்தில் 2 ஆயிரம் பெண்களின் கர்ப்பபை அகற்றிய சம்பவம் பெரும் ...

Widgets Magazine Widgets Magazine