Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெ., சசி. இடையே இருந்த அதிர்ச்சியளிக்கும் உறவு?: ராம் கோபால் வர்மா சர்ச்சை பதிவு!

ஜெ., சசி. இடையே இருந்த அதிர்ச்சியளிக்கும் உறவு?: ராம் கோபால் வர்மா சர்ச்சை பதிவு!


Caston| Last Modified வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (16:29 IST)
அடிக்கடி சர்ச்சைக்குறிய வகையில் டுவிட்டரில் பதிவு செய்யும் இயக்குனர் ராம் கோபால் வர்மா தற்போது மீண்டும் சர்ச்சை ஏற்படும் வைகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 
 
சசிகலா என்ற பெயரில் ராம் கோபால் வர்மா படம் ஒன்றை எடுக்க இருப்பதாக கூறியுள்ளார். அதில் சசிகலா, ஜெயலலிதா இடையே இருந்த உண்மையான உறவை வெளிச்சம் போட்டு காட்ட உள்ளதாக கூறியுள்ளார்.


 
 
அவரது டுவிட்டர் பதிவில், ஜெயலலிதா, சசிகலா இடையே இருந்த உறவு குறித்தான உண்மையை போயஸ் கார்டனில் வேலை பார்ப்பவர்கள் என்னிடம் கூறினார்கள். அது நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. இதனை படம் எடுத்து காட்டுவேன்.


 
 
சசிகலா என பெயரிடப்பட்டுள்ள இந்த படம், சசிகலாவின் முன்னால் மற்றும் பின்னால் உள்ள கதையாகும். இது மன்னார்குடி மாஃபியா உறுப்பினர்களுக்கு மட்டும் தான் புரியும். மன்னார்குடி மாஃபியா குடும்பத்தின் டான் விடோ சசிகலா கார்லியோனி... இதை மறுக்க மாட்டார்.


 
 
ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலா தற்போது இருக்கும் சிறை அறைக்கு கூட வரும் என கூறியுள்ளார். உண்மை கதைகளை வைத்து படம் எடுக்கும் ராம் கோபால் வர்மா இதனையும் படமாக எடுத்தால் இது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.


இதில் மேலும் படிக்கவும் :