Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழகத்தில் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் - மீண்டும் ரஜினி காந்த்

Last Modified வியாழன், 8 பிப்ரவரி 2018 (13:32 IST)
தான் அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்து விட்டார். 

 
மேலும், தனிக்கட்சி தொடங்கி அடுத்து நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்போது அவரது நற்பணி மன்ற நிர்வாகிகள் மூலம் ஆள் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி “தமிழகத்தில் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும். உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது பற்றி காலம்தான் முடிவு செய்யும்” என தெரிவித்தார்.

இதுவரை சிஸ்டம் சரியில்லை என பொதுவாக கருத்து கூறி வந்த ரஜினி, தற்போது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை எனப் பேசத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :