Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினிதான் முதல்வர். நள்ளிரவில் சென்னையை பரபரப்பாக்கிய போஸ்டர்

Sivalingam| Last Modified வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (05:34 IST)
தமிழக முதல்வராக நேற்று பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுமக்கள் ஆதரவு இல்லை என்பது ஃபேஸ்புக், டுவிட்டரில் பதிவு செய்யப்படும் ஏராளமான பதிவுகளில் இருந்து தெரிய வருகிறது.இந்நிலையில் ரஜினிதான் எங்கள் அடுத்த முதல்வர், அவர் முதல்வர் ஆனால் நாட்டுக்கு பெஸ்ட் நடக்கும் என்ற அர்த்தத்தில் போஸ்டர்கள் நேற்று நள்ளிரவில் சென்னையில் ஒட்டப்பட்டுள்ளது. குறிப்பாக அண்ணா சாலையின் பல இடங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி' என்ற வாசகங்களுடன் தலைமைச்செயலக கட்டிடத்தின் முன் ரஜினி தனது குழுவினர்களுடன் இருக்கும் இந்த ஆளுயர போஸ்டர், நள்ளிரவு நேரத்திலும் சென்னையை பரபரப்பாக்கி உள்ளது.

ஏற்கனவே கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த அரசியல் குழப்பம் தீர ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :