உள்ளாட்சி தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவில்லை : ரஜினி மன்றம் அறிக்கை!

rajinikanth
Last Updated: ஞாயிறு, 8 டிசம்பர் 2019 (12:23 IST)
ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில்  நேற்று  நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர், கோலிவுட் பிரபலங்கள் , ரசிகர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் ரஜினிகாந்த் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் மேடையில் பேசுகையில்,  ’என் மீது நம்பிக்கை வையுங்கள்’ என ரஜினி ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். அதைக் கேட்டு, அரங்கினுள் அமர்ந்திருந்த பலரும் சுவாரஸ்யமாக கேட்டு கைதட்டினர்.
 
இந்நிலையில், வரும் உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று ரஜினி மன்றம் அறிக்கை அனுப்பி உள்ளது.
 
அதில், மன்றத்தின் பெயர் கொடியை பயன்படுத்தி வாக்கு சேகரிக்கக் கூடாது ரஜினியின் பெயர் புகைப்படத்தை பயன்படுத்தினால் சட்ட  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :