Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டிசம்பர் 12ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடும் ரஜினிகாந்த்?

வெள்ளி, 16 ஜூன் 2017 (17:26 IST)

Widgets Magazine

நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்கிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
கடந்த மாதம் தனது ரசிகர்களை சந்தித்து உரையாடிய ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது பற்றி சூசமாக தெரிவித்தார். அதிலிருந்து அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதே ஊடகங்களின் விவாத பொருளாக மாறிவிட்டது. 
 
ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவார் எனவும், ஜூலை மாதம் அவர் முக்கிய அறிவிப்பார் எனவும் அவரின் சகோதரர் சத்யநாரயணாவும் கூறியிருந்தார். தற்போது ரஜினி ‘காலா’ படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக நடித்து வருகிறார். 
 
மேலும், முன்பு போல் இல்லாமல், இந்த முறை அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என அவரின் நெருங்கிய வட்டாரங்களும் கூறி வருகின்றனர். அதை நிரூபிக்கும் வகையில், அரசியலுக்கு வருவது பற்றி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள், தன்னுடைய நலம் விரும்பிகள், நெருக்கமான அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோரிடம் அவர் ஆலோசனை செய்து வருகிறார். 
 
இந்நிலையில், அவரின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி, அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என செய்திகள் வெளிவந்துள்ளது. அவரது ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

உலகின் எட்டாவது அதிசயம் இது தான்!!

நியூஸிலாந்தில் உலகின் எட்டாவது அதிசயம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஏழு உலக அதிசயங்கள் ...

news

ஜெயலலிதாவின் மருத்துவ செலவு ரூ.6 கோடியை கட்டிய அதிமுக

ஜெயலலிதாவின் மருத்துவச் செலவு ரூ.6 கோடியை கட்சி சார்பிலே அளிப்பது என்று முடிவு ...

news

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போலீசாருடன் மோதல் - முதல்வரின் மண்டை உடைந்தது

சென்னை பச்சையப்பன் கல்லூரியின் முன்பு போலீசாருடன் மாணவர்களுக்கு ஏற்பட்ட மோதலில், கல்லூரி ...

news

பள்ளியிலேயே பலாத்காரம் செய்யப்பட்ட எல்கேஜி சிறுமி: காமுகனுக்கு ஆயுள் தண்டனை!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் எல்கேஜி படித்துவந்த 4 வயது சிறுமியை அந்த பள்ளியை சேர்ந்த ...

Widgets Magazine Widgets Magazine