Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கமல்ஹாசன் அண்ணன் மறைவிற்கு ரஜினிகாந்த், ஸ்டாலின் இரங்கல்


sivalingam| Last Modified ஞாயிறு, 19 மார்ச் 2017 (23:08 IST)
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் இன்று காலை அவரது மகள் வசிக்கும் லண்டன் வீட்டில் மரணம் அடைந்தார்.


 அவரது மறைவு கமல்ஹாசனுக்கு தனிப்பட்ட முறையில் மாபெரும் இழப்பாக கருதப்படுகிறது. இந்த நிலையில் சந்திரஹாசன் மறைவுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

'என்னுடைய நண்பர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசனின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

அதேபோல் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திர ஹாசன் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,” சகோதரரை இழந்து வாடும் நடிகர் கமலஹாசனுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.” என தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :