ரஜினி பயந்த சுபாவம் உடையவர்: நாங்க அவருக்கு பாதுகாப்பு வழங்குவோம்!

ரஜினி பயந்த சுபாவம் உடையவர்: நாங்க அவருக்கு பாதுகாப்பு வழங்குவோம்!


Caston| Last Modified வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (10:49 IST)
நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரில் யார் அரசியலுக்கு வருவார். அல்லது இருவரும் அரசியலுக்கு வருவார்களா என்ற டாப்பிக் பல நாட்களாக சமீபமாக பேசப்படுகிறது. இருவரையும் ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 
 
இந்நிலையில் ரஜினி, கமல் ஆகியோர் குறித்தும் அவர்கள் அரசியலுக்கு வரலாமா என்பது குறித்தும் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் சேதுராமன் பேசியுள்ளார்.
 
அக்டோபர் 29-ஆம் தேதி பசும்பொன்னில் உள்ள தேவர் ஆலையத்துக்கு மிகுந்த செலவில் நடத்த உள்ள கும்பாபிஷேகம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சேதுராமன் ரஜினி, கமல் குறித்தும் பேசினார்.
 
கமல் அரசியல் ஆர்வம் உடையவர். ஆனால் ரஜினியோ பயந்த சுபாவம் உடையவர். இவர்கள் இருவரும் அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். மேலும் ரஜினி, கமல் இருவரும் தேவர் குருபூஜை விழாவுக்கு வந்தால், கட்சியின் சார்பில் அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவோம் என கூறினார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :