Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இது என்னடா கொடுமை ; ரஜினி அரசியலுக்கு வரலனா இப்படி நடக்குமா?

rajinikanth drinkers" width="600" />
Murugan| Last Updated: புதன், 17 மே 2017 (12:58 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும். இல்லையேல் பல மாநிலங்களில் கடுமையான வறட்சி ஏற்படும் என சென்னையை சேர்ந்த ஒரு சாமியார் எச்சரித்துள்ளார்.

 

 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக அவரின் ரசிகர்கள்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அது இறைவனின் கையில் இருக்கிறது என ரஜினி தொடர்ந்து கூறி வருகிறார். சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்த போது கூட, அதே கருத்தை கூறினார்.
 
இந்நிலையில், சென்னை தி.நகர் முழுவதும் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ரஜினிகாந்த அரசியலுக்கு வரவேண்டும். ஏனெனில் அவர் வராத காரணத்தினால் இயற்கை கட்டுப்பட்டு இருக்கிறது. இனியும் வர கால தாமதமாக்கினால், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களிலும் கடுமையான வறட்சி ஏற்படும். மழை பெய்யாது. நிலத்தடி நீர் மட்டம் உயரும். எனவே, அவர் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  


 

 
தி.நகரை சேர்ந்த சிவசக்தி அருணகிரி என்ற சாமியார்தான் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அந்த போஸ்டரில் அவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :