Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓ.பி.எஸ். வீட்டில் ஒட்டப்பட்டிருந்த சசிகலா போஸ்டர் கிழிப்பால் பரபரப்பு!

ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (16:09 IST)

Widgets Magazine

ஓபிஎஸ் வீட்டில் ஒட்டபட்டிருந்த போஸ்டரில் சசிகலா படத்தை கிழித்த அதிமுக தொண்டரை பொது இடத்தில் காவல்துறையினருடன் சேர்ந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் 6ஆம் தேதி திங்கட்கிழமை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனையடுத்து, முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டனர்.

அவர் வகித்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் பதவியினை ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், 25 ஆண்டு காலமாக அரசியல் ஆலோசகருமாக இருந்துவந்த சசிகலா நடராஜன் அவர்கள் டிசம்பர் 31ஆம் தேதி ஏற்றுக் கொண்டார்.

கட்சியில் சசிகலாவுக்கு ஆதரவு உள்ள அளவிற்கு எதிர்ப்பும் இருந்தது. பல இடங்களின் அவருடைய புகைப்படம் தாங்கிய பதாகைகள் கிழிக்கப்படுவது, போஸ்டர்களில் சாணி அடிக்கப்படுவதுமாக இருந்தது.

மேலும், சிலர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். மேலும், ஜெ. தீபா பேரவை என்ற பேயரில் இயக்கம் ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் முதலவர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலையில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை ஆதரித்து ஏகப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.

இதில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் வீட்டு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கட்சி தொண்டர் ஒருவர் சசிகலாவின் முகத்தை மட்டும் கிழித்து கொண்டிருந்தார் இதை பார்த்த கட்சிக்காரர்கள் அவரை பிடித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பலர் முன்னிலையில் அந்த தொண்டரை பிடித்து சரமரியாக தாக்கினார். அவருடன் தனி பாதுகாவலர் மற்றும் மயிலாப்பூர் காவலர் ஒருவரும் தாக்கினர். இதில் அந்த தொண்டர் நிலைகுலைந்து போனார்.

அவரை சரமாரியாக தாக்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். அமைச்சரே சாலையில் இறங்கி சாதாரண தொண்டனை தாக்கியது சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தமிழகத்தின் 12வது முதலமைச்சர் சசிகலா

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உரையாற்றி வருகிறார்

news

முதலமைச்சராக சசிகலாவை பன்னீர்செல்வம் முன்மொழிந்தார்

அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து வரும் 7ஆம் தேதி ...

ஜெ. வீட்டில் உள்ளவர்கள் முதல்வராக மக்கள் வாக்களிக்கவில்லை - சசிகலாவை சீண்டும் ஸ்டாலின்

தமிழக மக்கள் ஜெயலலிதா அரசு அமையவே வாக்களித்தார்கள் மற்றும் ஒ.பன்னீர்செல்வம் அல்லது ...

news

7 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கும் சசிகலா!!

ஜெயலலிதா மறைவுக்கு அதிமுக கட்சி சார்பாக ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக ...

Widgets Magazine Widgets Magazine