1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 7 அக்டோபர் 2015 (08:50 IST)

வட தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வட தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஆங்காங்கே பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
 
வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே இன்று இடியுடன்கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் தென் மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், சென்னையைப் பொருத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.