வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 1 மார்ச் 2017 (22:08 IST)

நெடுவாசல் விவசாயிகளுக்காக உண்ணாவிரதம் இருக்கும் ராகவா லாரன்ஸ்

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகமே கொந்தளித்து வருகிறது. நெடுவாசல் பகுதி மக்கள் தொடர்ந்து 14வது நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.




இந்த போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மாணவர்களும் இளைஞர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் விஷால் உள்பட திரையுலகினர்களும், நடிகர் சங்கமும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் நடிகரும், இயக்குனருமாகிய ராகவா லாரன்ஸ் நெடுவாசல் மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை 9 மணி முதல் 6 மணி வரை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தன்னுடைய ஃபேஸ்புக்கில் 'நெடுவாசல் திட்டத்திற்காக நாளை நடைபெறும் உண்ணாவிரத நிகழ்ச்சிக்கு இளைஞர்கள் பெருமளவு கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.