வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (12:57 IST)

திமுகவில் இணைந்தார் ராதாரவி - மீண்டும் தனது குடும்பத்தில் சேர்ந்ததாக பேட்டி

திமுக விசுவாசியாக இருந்த ராதாரவி பின்னர் விலகி அதிமுகவில் சேர்ந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் அதிமுகவில் இருந்து விலகி திமுக பக்கம் செல்வது போல இருந்தது. ஆனால் விலகாமல் அதிமுகவிலேயே தொடர்ந்தார்.


 

 
அந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் இருந்து விலகி இருந்த ராதாரவி சசிகலாவின் தலைமையை விரும்பாமல் மீண்டும் திமுக பக்கம் செல்ல தயாராகிவிட்டார் என்ற செய்திகள் வெளியானது.
 
இதனையடுத்து நடிகரும் வேளச்சேரி தொகுதி திமுக எம்எல்ஏவுமான வாகை சந்திரசேகர் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட ராதாரவி, அரசியல் குறித்த தனது முடிவை திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து விரைவில் அறிவிப்பதாக கூறினார். மேலும் ஸ்டாலினுக்கு முதல்வராகும் அனைத்து தகுதிகளும் உள்ளது என்றார். 
 
செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு குசும்புடன் பதிலளித்த ராதாரவி, முதல்வர் மக்களுக்கு வேலைக்காரனா இருக்கணும். வேலைக்காரி முதல்வரா இருக்க கூடாது. அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களுடன் அரசியல் செய்த குடும்பம் என்னுடையது. சசிகலாவுடன் அரசியல் செய்வதை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்றார்.
 
இந்நிலையில், இன்று காலை, திமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அறிவாலயத்திற்கு சென்ற அவர் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராதாரவி  “மு.க.ஸ்டாலின் மட்டும்தான் இனி தமிழகத்தை காப்பாற்ற முடியும். இன்னும் சில நடிகர்கள் திமுகவில் இணைய விரும்புகிறார்கள். விரைவில் அவர்களும் வருவார்கள். மீண்டும் எனது குடும்பத்தில் இணைந்தது போல் உணர்கிறேன். இனி வரும் தேர்தலில் திமுக தொடர்ந்து வெற்றி பெறும்” என அவர் கூறினார்.