வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 14 நவம்பர் 2014 (11:02 IST)

ஆர். நல்லகண்ணுவை சந்தித்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவை நேரில் சந்தித்துப் பேசினார்.
 
சென்னை அசோக்நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
திமுக தலைவர் கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் என். சங்கரய்யா ஆகியோரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த நவம்பர் 2ஆம் தேதி சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
 
அதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.