வெளியேற மறுக்கும் எம்.எல்.ஏ.க்கள்: போலீஸாருடன் தள்ளுமுள்ளு


Abimukatheesh| Last Updated: புதன், 15 பிப்ரவரி 2017 (18:57 IST)
கூவத்தூர் நட்சத்திர விடுதியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேற மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் காவல்துறையினர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

 

 
கூவத்தூர் நட்சத்திர விடுதிக்குள் காவல்துறையினர் நுழைந்தனர். அங்கு எம்.எல்.ஏ.க்களை வெளியேற கூறினர். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் வெளியேறும்படி நட்சத்திர விடுதி உரிமையாளரும் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  
 
எம்.எல்.ஏ.சரவணன் என்பவர் எடப்பாடி பழனிச்சாமி மீது ஆள் கடத்தல் புகார் கொடுத்ததை அடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்ய சென்றனர். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் அவரிடம் விசாரணை நடத்த அனுமதி அளிக்க மறுத்துள்ளனர். இதனால் காவல்துறையினர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
நேற்று மாலை பொழுதே காவல்துறையினர் அங்குள்ள எம்.எல்.ஏ.க்களை வெளியேற வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை காவல்துறையினர் அவர்களிடம் வெளியேர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அவர்களும் தற்போது வரை வெளியேற மறுத்து வருகின்றனர்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :