Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களை வெளுத்து வாங்கும் பொதுமக்கள்!

சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களை வெளுத்து வாங்கும் பொதுமக்கள்!


Caston| Last Modified வியாழன், 9 பிப்ரவரி 2017 (12:32 IST)
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு பொதுமக்களின் ஒட்டுமொத்த ஆதரவும், சசிகலாவுக்கு பயங்கரமான எதிர்ப்பும் நிலவி வருகிறது. சசிகலா முதல்வராவதை பெரும்பாலான பொதுமக்கள் விரும்பவில்லை. தேர்தலை சந்தித்து வெற்றி பெறாமல் குறுக்கு வழியில் முதல்வராக துடிக்கிறார் சசிகலா என பொதுமக்கள் பரவலாக பேசுகின்றனர்.

 
 
அதிமுக எம்எல்ஏக்கள் ஒரே குடும்பமாக என்னுடைய பக்கம் தான் இருக்கிறார்கள் என கூறும் சசிகலா அவர்களை சுதந்திரமாக வெளியில் விடாமல் சிறைபிடித்து வைத்திருப்பதாக பரவலாக பேசுகின்றனர்.


 
 
இந்நிலையில் தங்கள் தொகுதி எம்எல்ஏக்களின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் போட்டு அவர்கள் சசிகலாவை ஆதரிப்பதை நிறுத்திவிட்டு தொகுதி மக்களின் கோரிக்கையான ஓபிஎஸை ஆதரிக்குமாறு பதிவிட்டு வருகின்றனர்.


 
 
மேலும் அதிமுக எம்எல்ஏக்களின் தொலைப்பேசி எண்களை பதிவிட்டுள்ளனர். அந்தந்த தொகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் தொகுதி எம்எல்ஏக்களுக்கு போன் செய்து தாங்கள் கடத்தப்பட்டிருப்பது குறித்தும் சசிகலாவுக்கு ஆதரவு கொடுத்து வருவதும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
 
பொதுமக்கள் ஒரே அணியில் திரண்டு சசிகலாவை எதிர்ப்பதை சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பார்க்க முடிகிறது. வக்களித்து தேர்ந்துடுத்து அனுப்பிய எம்எல்ஏக்களுக்கு மக்கள் குரல் கேட்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


இதில் மேலும் படிக்கவும் :