Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டாஸ்மாக் கடையை அகற்ற கண்டன ஆர்பாட்டம்

Last Modified: வியாழன், 5 ஜனவரி 2017 (21:13 IST)

Widgets Magazine

திருவாரூர் மாவட்டம் ​மணக்கால் ​கிராம பஞ்சாயத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை (எண்:9711) அகற்றக்கோரி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கடையை அகற்றக்கோரி தொடர்முயற்சியில் ஈடுபட்டு வரும் அக்கிராம மக்கள், இன்று அக்கடைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
உரிய முறையில் அரசுக்கு மனு அளித்தல், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை வைத்தனர். டாஸ்மாக் கடையை அகற்றக்கோரும் பஞ்சாயத்து தீர்மானம் இருந்தால் மதுபானக்கடையை நிரந்தரமாக அகற்றலாம் என்று கடந்த 16.11.2016 அன்று உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு விண்ணப்பம், தொடர் அடையாள உண்ணாவிரதம் எனப் பல அறப்போராட்டத்தின் தொடர்ச்சியாகவே இன்றைய ஆர்ப்பாட்டம்​ ​நடைபெற்றது.
 
நீரின்றி பயிர்கள் வாடிவரும் நிலையிலும் திருவாரூர் மாவட்டத்தில் கிராம மக்கள் தெருவில் இறங்கிப் போராடினர்.  
 
இப்போராட்டத்தை ஒருங்கிணைத்த தென்னரசு கூறுகையில், "எங்கள் கிராம மக்களுக்குப் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது இந்த டாஸ்மாக் கடை. பலர் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடை மேலும் மக்களின் வாழ்க்கையைச் சீரழிக்கிறது. இன்றைக்குக் கிராம மகளிர் பலர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமென நம்புகிறோம்" என்றார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

நான் அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது: தீபா அதிரடி

ஜெயலாலிதா மறைவுக்கு பின் அதிமுக பொதுச் செயலாளாரக தேர்ந்தெடுக்க சசிகலாவுக்கு அதிமுக பெண் ...

news

இளம்பெண்ணை மோட்டாரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்கார முயற்சி - 5 பேர் கைது

இளம்பெண்ணை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ...

news

2வது திருமணம் செய்துவைக்க மறுத்த தந்தையை அடித்துக் கொன்ற மகன்

மயிலாடுதுறை அருகே தனக்கு இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என வற்புறுத்திய மகனின் ...

news

காற்று மாசுபாடால் நிறம்மாறும் ரெயில்கள்

சீனாவில் பல பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் ...

Widgets Magazine Widgets Magazine