வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (05:21 IST)

அதிமுக அரசுக்கு எதிராகப் போராட்டம்: பொன்முடி அறிவிப்பு

திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற கோரி விழுப்புரத்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆர்பாட்டம் நடைபெற உள்ளதாக, திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
 

 
இது குறித்து திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறியதாவது:- 

திமுக ஆட்சியின் போது, விழுப்புரத்தில் அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது. அண்ணா பொறியியல் கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது. விழுப்புரம் நகரில் ரூ. 7 கோடியே 50 லட்சம் செலவில் 108 சாலைகள் சிமெண்டு சாலைகளாக மாற்றப்பட்டுள்ளது.  
 
விழுப்புரம் அரசு கல்லூரியில் மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு ஷிப்டு முறை அறிமுகபட்டது. அரசு கலைக்கல்லூரியில் முது நிலை ஆராய்ச்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.   மேலும், மக்களுக்கு தேவையான பல நல்ல  திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்த நல்ல திட்டங்களை அதிமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது.
 
எனவே, திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறைவேற்ற கோரி ஆகஸ்ட் 8 ஆம் தேதி அன்று, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்றார்.
 
ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனுமதி கிடைப்பதில் சிக்கல் உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.