Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குமரி அனந்தனின் மதுவிலக்கு பிரச்சார நடைபயணம்-மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்


K.N.Vadivel| Last Modified திங்கள், 28 டிசம்பர் 2015 (05:51 IST)
குமரி அனந்தனின் மதுவிலக்கு பிரச்சார நடைபயணத்தை பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
 
 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்தியவாதியும் மூத்த தலைவருமான குமரி அனந்தன் சென்னை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் மதுவிலக்கு பிரச்சார நடைபயணத்தை அனைத்து கட்சியினருடன் இன்று துவங்கி வைத்தேன்.
 
மது விலக்கு அமல்படுத்த கோரி நீண்ட காலமாக போராடி வரும் தலைவரின் பிரச்சாரத்தை தொடங்கி வைத்ததில் மனமகிழ்ச்சி அடைகிறேன். மதுவிலக்கு வேண்டும் என்பது, இன்று தமிழகத்தில் மக்கள் இயக்கமாக மாறி விட்டது. 2016 ல் நிச்சயம் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு தாய்மார்கள் கண்ணீர் துடைக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :