வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 29 நவம்பர் 2015 (13:55 IST)

டெங்கு காய்ச்சல் உற்பத்திக்கு வாய்ப்பு - பள்ளிக்கு 25ஆயிரம் அபராதம்

டெங்கு உற்பத்தியாவதற்கு வாய்ப்பிருக்கும் வகையில், குப்பைகள் குவிக்கப்பட்டிருந்ததை அடுத்து பள்ளி மற்றும் தனியார் தங்கும் விடுதி ஆகியவற்றிற்கு மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது.
 

 
கோவை மாநகராட்சி துணை கமிஷனர் காந்திமதி, மாநகராட்சி சுகாதார அலுவலர் தலைமையில், தெற்கு மண்டலத்தில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் ஆய்வு நடைபெற்றது.
 
அங்கு சுகாதார மில்லாமலும், தொற்று நோய் பரவக்கூடிய காரணிகள் கண்டறியப்பட்டது. மேற்படி தங்கு விடுதி நிர்வாகத்திற்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
 
அதனையடுத்து பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் குடோன் ஆய்வு செய்யப்பட்டதில் அங்கு தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், டயர்களில் டெங்கு கொசு புழுக்கள் கண்டறியப்பட்டது. எனவே மேற்படி பிளாஸ்டிக் குடோனின் நிர்வாகத்திற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து அங்குள்ள ஒரு தனியார் பள்ளி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பள்ளியின் பின்புறத்தில் தேவையற்ற உடைந்த பொருட்கள் வைத்திருந்ததில் அனைத்திலும் டெங்கு நோயை பரப்பக் கூடிய கொசு புழுக்கள் கண்டறியப்பட்டது.
 
இதுதவிர, பள்ளியில் வைக்கப்பட்டிருந்த செயற்கை நீரூற்றில் கொசுபுழுக்கள் கண்டறியப்பட்டதால் மேற்படி பள்ளி நிர்வாகத்திற்கு ரூ.25.000 அபராதம் விதிக்கப்பட்டது.
 
மேலும், பள்ளியின் சுகாதார சான்றை ஏன் ரத்து செய்யக் கூடாது என்ற “நோட்டீஸ்” அனுப்ப உத்தரவிடப்பட்டது.