வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2015 (15:11 IST)

இளங்கோவன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்

பிரதமரை பற்றி விமர்சனம் செய்த இளங்கோவன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 
டெல்லியில் இருந்து இன்று காலை விமானம் மூலம் சென்னைக்கு வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமான நிலையத்தில் செய்தியாளர்களு பேட்டியளித்தார்.
 
அப்போது பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–
 
பிரதமர்  நரேந்திர மோடி குறித்து காங்கிரஸின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறிய தனிப்பட்ட விமர்சனத்தை கடுமையாக கண்டிக்கிறேன். இதற்கு இளங்கோவன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
 
காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு வரையிலான பக்கிங்காம் கால்வாய் நீர்வழி போக்குவரத்து திட்டத்துக்கு மாநில அரசின் ஒத்துழைப்புக்காக காத்து இருக்கிறோம். இத்திட்டத்தை தொடங்க மத்திய அரசு தயாராக உள்ளது.
 
நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறைவேறினால் நாடு வளர்ச்சி அடையும். தமிழகத்தில் வரும் சட்ட மன்ற தேர்தலில் திமுக, அதிமுக வுக்கு மாறாக தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி அமையும்.
 
தமிழக மீனவர்கள் வரும் 29 ஆம் தேதி மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்திக்க உள்ளனர். அப்போது மீனவர்கள் பிரச்சனை குறித்து நிரந்தர தீர்வு காண விவாதிக்கப்படும். இவ்வாறு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.