1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2016 (16:53 IST)

ஆம்பூரில் போட்டியிடுகிறாரா பிரேமலதா விஜயகாந்த்?

தனது சொந்த ஊரான ஆம்பூரில் தேமுதிக சார்பில் பிரேமலதா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்துக் கட்சிகளும் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் அதிமுக மட்டும்தான் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.  
 
இந்நிலையில், தேமுதிகவின் மகளிரணி ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் ஆம்பூரில் நடைபெற்றது. அதில், பிரேமலதா விஜயகாந்த் ஆம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
பிரேமலதாவின் சொந்த ஊர் குடியாத்தம் அருகே உள்ள செம்பேடு கிராமம். அவரது தந்தை ஆம்பூர் சர்க்கரை ஆலையில் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். பிரேமலதா ஆம்பூரில் உள்ள இந்து மேல்நிலை பள்ளியில் படித்தவர். எனவே அவர்களுக்கு அங்கு எராளமான உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்கள் உள்ளன.
 
இதனால், ஆம்பூரில் அவர் போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என தேமுதிக கட்சியினர் கூறுகின்றனர்.
 
ஆனால், அங்கு போட்டியிடுவது குறித்து பிரேமலதா இன்னும் முடிவு செய்யவில்லை. எப்படி பார்த்தாலும், வேலூர் மாவட்டத்தில்தான் அவர் போட்டியிடுவார் என்று தேமுதிக தொண்டர்கள் கூறுகிறார்கள்.