Widgets Magazine
Widgets Magazine

Widgets Magazine

ஜெ.வின் கால்கள் அகற்றப்பட்டதா?- பிரதாப் ரெட்டி பரபரப்பு பேட்டி


Murugan| Last Updated: வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (17:42 IST)
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விபரங்களை வெளியிடத் தயார் என அப்பல்லோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் பேட்டி கூறியுள்ளார்.

 

 
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வருடம் செப்.22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், டிசம்பர் 5ம் தேதி அவர் இறந்துவிட்டார் என அறிவிக்கப்பட்டது வரை ஜெ.வின் மரணத்தில் பல்வேறு மர்மங்களும், சந்தேகங்களும் எழுவதை தடுக்க முடியவில்லை. முக்கியமாக, சிகிச்சையின் போது அவரின் இரண்டு கால்களும் அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது.  
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதாப் ரெட்டி “ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து விபரங்களையும், எந்த விசாரணையிலும் அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதில் ஒளிவு மறைவு எதுவுமில்லை. அவரின் கால்கள் அகற்றப்பட்டதாக வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தியே” என அவர் கூறியுள்ளார்.
 

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :