வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 17 மே 2017 (04:35 IST)

மீண்டும் இருளில் மூழ்கிய சென்னை!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு மத்திய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலுவைத்தொகை தராததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அன்றைய தினம் இரவு முழுவதும் சென்னை நகரமே இருளில் மூழ்கியது.



 


இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு திடீரென சென்னையில் மின்சாரம் தடை ஏற்பட்டது. இதனால் சென்னையின் முக்கிய பகுதிகளான நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, மாம்பலம், ராயப்பேட்டை, வியாசர்பாடி, கொளத்தூர், தேனாம்பேட்டை, மயிலாப்பூர் என சென்னை மாநகரின் 95 சதவீத பகுதிகள் இருளில் மூழ்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சென்னை வாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மின்மாற்றியில் பழுது ஏற்பட்டதால் சென்னையில் மின்சாரம் தடை ஏற்பட்டதாகவும், அந்த பழுது உடனடியாக சரிசெய்யப்பட்டு படிப்படியாக மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார்.