1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2017 (05:11 IST)

இருளில் மூழ்கியது சென்னை: என்ன காரணம்?

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோடையிலும் மின் தட்டுப்பாடு இன்றி மின் விநியோகம் இருக்கும் ஒரு பகுதியாக இருந்து வந்தது. குறிப்பாக அண்ணா சாலை போன்ற முக்கிய இடங்களில் மணிக்கணக்கில் மின்சாரம் இல்லாமல் இருப்பது என்ற நிகழ்வு இருந்ததே இல்லை



 


ஆனால் நேற்றிரவு சென்னை அண்ணா சாலை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நேற்று கிட்டத்தட்ட சென்னை முழுவதுமே மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியது

வடசென்னையில் உள்ள தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு 9மணி முதல் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அதேபோல் எழும்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் தெரு விளக்குகளும் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கியது. சென்னை தேனாம்பேட்டை பகுதியில் இரவு ஒன்பது மணி முதல் அதிகாலை 4 மணி வரை மின்சாரம் இல்லை

இதுகுறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்தபோது, 'மணலி - மயிலாப்பூர் இடையிலான உயர் மின் அழுத்த பாதையில் பழுது காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. பழுதை சீர் செய்யும் பணி துரிதமாக நடைபெறுகிறது. விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்தார்.