Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சந்தான பிரச்சனைக்காக சென்னையில் போஸ்டர் போர்


sivalingam| Last Modified புதன், 11 அக்டோபர் 2017 (18:16 IST)
நடிகர் சந்தானம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரமுகரும் வழக்கறிஞருமான பிரேம் ஆனந்த் என்பவரை தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் சந்தானம் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் சந்தானம் தலைமறைவாகியுள்ளதோடு, முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்


 
 
இந்த நிலையில் பாஜக கட்சியினர்களும், வன்னியர் சங்கமும் போட்டி போட்டுக்கொண்டு போஸ்டர் போர் நடத்தி வருகின்றன. வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் மீது தாக்குதல் நடத்திய சந்தானத்தை கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினர்களும், சந்தானத்தை ஏமாற்றி மோசடி செய்து மிரட்டல் விடுத்த கட்டப்பஞ்சாயத்து பிரேம் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன்னியர் சங்கமும் சென்னையின் பல இடங்களில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
 
இந்த போஸ்டர் போர் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சந்தானத்தின் முன் ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :