தபால் ஓட்டு பதிவு தொடங்கியது: ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பு வரை வாக்களிக்கலாம்


Caston| Last Modified ஞாயிறு, 8 மே 2016 (08:27 IST)
தமிழக சட்டசபை தேர்தலுக்கான தபால் ஓட்டு பதிவு தொடங்கியது. ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பு வரை தபால் ஓட்டை செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 
 
சட்டசபை தேர்தலை ஒட்டி தேர்தல் பணியாற்ற பள்ளி ஆசிரியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் என இருபது ஆயிரம் பேரும், பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் அலுவலகம் சிறப்பு ஏற்பாடு செய்தது.
 
இன்று முதல் இவர்கள் தபால் ஓட்டளிக்கலாம். வரும் 19 தேதி வரை தபால் ஓட்டளிக்க கால அவகாசம் அளித்துள்ளனர்.
 
பயிற்சியில் ஈடுபட்டு உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் பலர் நேற்று தபால் ஓட்டு போட்டனர். நேற்று தபால் ஓட்டு போடாதவர்கள் வருகிற 15-ஆம் தேதி நடக்கும் இறுதிக்கட்ட தேர்தல் பயிற்சி முகாமிலும் வாக்களிக்கலாம்.
 
தபால் ஓட்டுகள் அடங்கிய பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லும் வரை வீடியோ மூலம் பதிவு செய்யப்பட இருக்கிறது. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :