வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 25 நவம்பர் 2015 (11:40 IST)

பூண்டி நீர் தேக்கத்திலிருந்து 20,400 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக்கை

இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பூண்டி நீர்த்தேக்கம் அதன் அதிகபட்ச கொள்ளளவான 35 அடியில் தற்போது 34 அடியை எட்டியுள்ளது.


 

 
பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.  அணைக்கு 10,711கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது
 
நீர் வரத்து அதிகரித்ததால் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் அளவு வினாடிக்கு 20,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
 
இதனால், கொசஸ்தலை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஒதப்பை, மோவூர், காரனோடை, மீஞ்சூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.