Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காலியான சசிகலா கூடாரம் - ஓ.பி.எஸ்-ற்கு பொன்னையன் ஆதரவு


Murugan| Last Modified சனி, 11 பிப்ரவரி 2017 (17:18 IST)
தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்-ற்கு அதிமுக செய்தி தொடர்பாளரும், அமைப்பு செயலாளருமான பொன்னையன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

 
சசிகலாவை எதிர்த்து நிற்கும் ஒ.பி.எஸ்-ற்கு ஏற்கனவே 7 எம்.எல்.ஏக்கள்,  3 எம்.பிக்கள், தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், திடீர் திருப்பமாக, எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இருப்பவரும், அதிமுகவின் செய்தி தொடர்பாளரான பொன்னையன், தற்போது ஓ.பி.எஸ் வீட்டிற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
ஓ.பி.எஸ் பக்கம் சென்றுவிட்ட மதுசூதனன் வகித்து வந்த அவைத்தலைவர் பதவி தனக்கு வரும் என பொன்னையன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில், செங்கோட்டையனுக்கு அந்த பதவியை சசிகலா கொடுத்துவிட்டார். எனவே, அதிருப்தியடைந்த பொன்னையன் ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்து விட்டதாக கூறப்படுகிறது.
 
அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு தெரிவித்து வருவது அதிகரித்து வருவது, சசிகலா தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :