Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜல்லிக்கட்டுக்காக பிரசாரம் செய்த பெண் கைது


Abimukatheesh| Last Updated: புதன், 4 ஜனவரி 2017 (15:51 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பைக் மூலம் பிரசாரம் செய்து வந்த மகேஷ்வரி என்ற பெண்ணை மதுரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

 
ஜல்லிக்கட்டு போட்டிக்கு இருக்கும் தடையை தடையை நீக்க கோரியும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் புதுச்சேரியை சேர்ந்த மகேஷ்வரி என்ற பெண், கடந்த 2ஆம் தேதி, 2 ஆயிரம் கி.மீ தூரம் தனது பிரசார பயணத்தை பைக்கில் மேற்கொண்டார்.
 
கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், சென்னை வழியாக சுற்றி ஜனவரி 5ம் தேதி புதுச்சேரி வந்தடைய திட்டம்.
 
இந்நிலையில் அவரை மதுரையில் காவல்துறையினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். தற்போது மகேஷ்வரி மற்றும் அவருடன் கைதான எட்டு இளைஞர்கள் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், தமிழ் உண்ர்வாளர்கள் சாலை மறியல் செய்து கைதாகியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :