Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மார்ச் 1ஆம் தேதி முதல் பெப்சி, கோக் விற்பனை இல்லை! - புதுச்சேரியில் அதிரடி


லெனின் அகத்தியநாடன்| Last Modified புதன், 1 பிப்ரவரி 2017 (13:41 IST)
மார்ச் 1ஆம் தேதி முதல் புதுச்சேரியில் பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களை விற்பனை செய்வதில்லை என்று வணிகர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

 

புதுவை மாநில வணிகர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ”தமிழகத்தைப்போல் புதுச்சேரியிலும் மார்ச் 1–ந்தேதி முதல் கோக், பெப்சி உள்ளிட்ட குளிர்பானங்களை விற்பனை செய்வது இல்லை” என்று முடிவெடுக்கப்பட்டது.

மேலும், ‘ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது அறிவிப்பால் வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதைக்கொண்டு வர்த்தகர்களின் தொழில் வளர்ச்சிக்கு கடனுதவி அளிக்க வேண்டும்.

ரொக்கமில்லா பரிவர்த்தனைக்காக ஸ்வைப்பிங் மெஷின் பயன்படுத்தும்போது 1.5 முதல் 2.5 சதவீதம் வரை சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படுகிறது. அதை 0.05 சதவீதமாக குறைக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இதில் மேலும் படிக்கவும் :