1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (11:57 IST)

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு முதல்வர் வாய் திறக்காதது ஏமாற்றமே- பொன்.ராதாகிருஷ்ணன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களில் அவரை யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் அவரது புகைப்படங்களும் வெளியாகவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பேச துவங்கினர். ஆனாலும் இதுவரை சசிகலா தரப்பு இதற்கு பதிலளிக்கவில்லை.



இந்த நிலையில் சசிகலா நடவடிக்கைகளை விரும்பாத ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கட்சியிலிருந்து வெளியேறினார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும், இது குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் ஓபிஎஸ் அறிவித்திருந்தார். ஆனால் ஓபிஎஸ்க்கு போதிய ஆதரவு இல்லாததை அடுத்து சசிகலா தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார்.

இந்த சூழ்நிலையில் சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறி இருந்தார். தற்போதைய முதலமைச்சர் அது பற்றி தனது முதல் அறிக்கையில் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது என்றார்.