Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெ.வின் மரணத்திலும் அரசியல் செய்த சசிகலா: கட்சியை கைப்பற்ற நடந்த இறுதி யுத்தம்! (வீடியோ இணைப்பு)

ஜெ.வின் மரணத்திலும் அரசியல் செய்த சசிகலா: கட்சியை கைப்பற்ற நடந்த இறுதி யுத்தம்! (வீடியோ இணைப்பு)


Caston| Last Updated: வெள்ளி, 30 டிசம்பர் 2016 (08:42 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியது. ஆனால் ஜெயலலிதா இறந்து விட்டதாக அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.

 
 
ஜெயலலிதா இறந்து விட்டதா மாலையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நில நிமிடங்களில் அப்பல்லோ அதனை மறுத்து ஜெயலலிதா உயிரோடு உள்ளார் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என கூறி பின்னர் நள்ளிரவில் அவர் இறந்து விட்டதாக கூறியது.
 
இது பொதுமக்கள் மத்தியில் பல குழப்பங்களையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. அந்த கடைசி மணி நேரங்களில் தமிழக அரசியலை தீர்மாணிக்கும் பல நிகழ்வுகள் நடந்துள்ளதாக பிரபல தமிழ் வார இதழ் வீடியோ வெளியிட்டுள்ளது.

 

நன்றி: விகடன்
 
ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதாக தகவல் வரும் முன்னரே எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது இரவோடு இரவாக புதிய அமைச்சாரவையையும், முதலமைச்சரையும் பதவியேற்க வைத்தது என சசிகலா செய்த அரசியல்களை இந்த வீடியோ கூறுகிறது.
 
மேலும் மருத்துவமனைக்கு, கட்சியினருக்கு சசிகலா உத்தரவிடுவது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்குவது என சசிகலாவின் கடைசிக்கட்ட யுத்தத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த வீடியோ.


இதில் மேலும் படிக்கவும் :