வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2015 (11:37 IST)

ஜெயிலுக்கு வந்த ரவுடியின் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட போலிஸ்காரர் கொடூர கொலை

ஜெயிலுக்கு வந்த ரவுடியின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த புதுச்சேரி போலீஸ்காரர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
புதுச்சேரியை அடுத்த முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரகு என்ற ரகுபதி (31). போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது கணவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
 
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே சாலையோரம், மோட்டார்சைக்கிளும் பிணம் ஒன்று ரத்தவெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விபத்து என்று கருதிய காவல் துறையினர் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
 
தகவல் தெரிந்ததும் ரகுபதியின் பெற்றோர் சென்று அவரது உடலை அடையாளம் காட்டினர். மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அவர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
 
இறுதியாக ரகுபதியின் செல்போனுக்கு சுகுணா என்ற பெண்ணிடம் பேசியதை வைத்து விசாரனையை மேற்கொண்டனர். அதில்  சுகுணாவின் கணவர் ரவுடி நித்யானந்தம், ஒரு வழக்கில் கைதாகி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்துள்ளார்.
 
அப்போது சிறைக்கு சென்ற சுகுணா, மனு எழுதி கொடுப்பதற்காக அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் ரகுபதியின் உதவியை நாடியுள்ளார். இதிலிருந்து அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது பின்னர் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
 
இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடி நித்யானந்தத்திற்கு அவர்களுக்கிடையேயான கள்ளக்காதல் தெரியவந்துள்ளது. இதனால் அவர் தந்து மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் இருவருக்கும் பழக்கம் தொடர்ந்து வந்துள்ளது.
 
இதனால் ஆத்திரம் அடைந்த நித்யானந்தம், சம்பவத்தன்று அவர், மனைவி சுகுணாவின் கழுத்தில் கத்திய வைத்து மிரட்டி செல்போனில் பேச வைத்து, ரகுபதியை வீட்டுக்கு வரவழைத்தார். தனது கூட்டாளிகள் 6 பேருடன் சேர்ந்து ரகுபதியை, ரவுடி நித்யானந்தம் காரில் கடத்தி கொலை செய்துள்ளார்.
 
இந்நிலையில் கொலையில் சம்பந்தபட்ட ரவுடி நித்யானந்தம், ஏழுமலை, அன்பரசன், பீட்டர், சக்திவேல், விக்னேஸ்வரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் 7 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.