1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 15 பிப்ரவரி 2017 (18:57 IST)

ஒரு மணி நேரத்தில் வெளியேற வேண்டும் ; அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

கூவத்தூர்விடுதியில் தங்கியிருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அனைவரும், இன்னு ஒரு மணி நேரத்தில் வெளியேறுங்கள் என போலீசார் கெடு விதித்துள்ளனர்.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியதை அடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் பேருந்தில் அழைத்து செல்லப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூரில் அமைந்துள்ள கோல்டன் பே ஹபுஸ் ரிசார்ட்டில் கடந்த 8ம் தேதி தங்க வைக்கப்பட்டனர். இதுவரை அவர்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை.அவர்கள் அங்கு சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், மதுரை தெற்கு பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ சரவணன், கூவத்தூரிலிருந்து மாறுவேடத்தில் தப்பி, ஓ.பி.எஸ் பக்கம் தஞ்சமடைந்தார்.  மேலும், சசிகலா தரப்பு தன்னை கடத்தி சென்றதாக அவர் டிஜிபியிடம் புகார் அளித்தார். அந்த புகாரில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் உள்ளிட்ட 5 பேர் மீது கூவத்தூர் பகுதி போலீசார் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
இதன் தொடர்ச்சியாக, எம்.எல்.ஏக்களை அங்கிருந்து வெளியேற்றும்  முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது, நாங்கள் இங்கிருந்து வெளியேற மாட்டோம் என  அடம் பிடித்து வருகின்றனர். 


 

 
அங்குள்ள அனைவரும் வெளியேறுங்கள் என அந்த விடுதி உரிமையாளரும் கூறிவிட்டார். ஆனாலும், எம்.எல்.ஏக்கள் வெளியேறாமல் அங்கு தங்கியுள்ளனர்.
 
இந்நிலையில், இன்னும் ஒரு மணி நேரத்தில் அனைவரும், இங்கிருந்து வெளியேற வேண்டும் என போலீசார் கெடு விதித்துள்ளனர். அப்படியும் அவர்கள் வெளியேற மறுத்தால், வலுக்கட்டாயமாக அவர்களை வெளியேற்று போலீசார் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. 
 
இதற்காக, அங்கு ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். எனவே, போலீசாருக்கும், அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது...