Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கள்ளக்காதலி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்த போலீஸ்


bala| Last Updated: வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (17:43 IST)
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்(34). சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் இவர்  ஜென்சி என்பவரை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு.

 

இந்தநிலையில் சந்தோசுக்கும் , கணேசபுரம் பகுதியை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விவகாரத்தால் கணவன் -மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவியை விட்டுவிட்டு, கள்ளக்காதலியின் வீட்டிலேயே தங்கினார்.

இந்த தகவல்களை அறிந்த கோவை கமிஷனர் அலுவலகத்தில் சந்தோஷை அழைத்து விசாரித்தனர். அப்போது தான் இனி அந்த பெண் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்று உறுதி அளித்தார். ஆனால் சில நாட்களுக்கு பின் மீண்டும் அந்த பெண் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று சந்தோசுக்கும் அந்த பெண்ணுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த சந்தோஷ், வீட்டிலிருந்த விஷத்தை குடித்தார். உடனே அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த அந்த பெண் அங்கிருந்து தலைமறைவானார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சந்தோஷ் மரணம் அடைந்தார்.

இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பெண்ணை தேடி வருகின்றனர்.

 


இதில் மேலும் படிக்கவும் :