ஓ.பி.எஸ்.க்கு பெருகும் ஆதரவு: மீண்டும் மாணவர் போராட்டம்?


Abimukatheesh| Last Updated: புதன், 8 பிப்ரவரி 2017 (14:18 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் மீண்டும் வெடிக்க வாய்ப்புள்ளதாக பரவும் தகவலையடுத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

 


தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகுவதாக கூறி ராஜினாமா கடிதம் கொடுத்ததை அடுத்து சசிகலா தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக திரும்பியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது என்ற தகவலை அடுத்து காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அரசுக்கு எதிராக சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் தகவல்களை பரப்புபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :