Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பெண் காவலருடன் உல்லாச வாழ்க்கை - 3ஆவது திருமணம் செய்ய முயன்ற காவலர்


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 1 டிசம்பர் 2016 (17:56 IST)
பெண் காவலருடன் குடும்பம் நடத்தி விட்டு தற்போது 3ஆவது திருமணம் செய்ய முயன்ற காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருபவர் சுதா. இவர், திருமணமாகி விவாகரத்து பெற்று ஒரு ஆண் குழந்தையுடன் வசித்து வருகிறேன்.

இந்நிலையில், திண்டுக்கல் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றும் விஜயகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர், இருவரும் கணவன், மனைவிபோல் வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே விஜயகுமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

அதன் பிறகு சுதா நான் விஜயகுமாரை விட்டு விலகிச் சென்றாலும்,  விஜயகுமாரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையில், விஜயகுமார் சுதாவை கத்தியால் குத்தியுள்ளார். வழக்கு விசாரணையின் போது, விஜயகுமார் என் கணவர்தான் எனக்கூறி அவரை வழக்கிலிருந்து காப்பாற்றி உள்ளார். பிறகு விஜயகுமார், திருமணம் செய்த பெண்ணிடம் இருந்து விவாகரத்து பெற்று சுதாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், விஜயகுமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த விஷயம் சுதாவிற்கு தெரிய வந்ததை அடுத்து, விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜயகுமாரை தன்னுடன் சேர்ந்து வாழ ஏற்பாடு செய்ய வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :