Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரூ.1 கோடி பழைய நோட்டு மாற்றிக் கொடுத்ததில் மோசடி செய்த இன்ஸ்பெக்டர்...


Murugan| Last Modified வியாழன், 2 பிப்ரவரி 2017 (17:47 IST)
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுப்பதில் மோசடி செய்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
பழைய நோட்டுகளை மாற்றிக் கொடுப்பதில் இதுவரை இடைத்தரகர்கள் மற்றும் வங்கி ஊழியர்களே சிக்கினர். ஆனால், தற்போது ஒரு போலீஸ் அதிகாரியும் அதில் சிக்கியுள்ளார்.
 
சென்னை அண்ணாநகர் சரகத்துக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ஜெயச்சந்திரன். இவர், தன்னுடைய உறவினர் மூலமாக, ஒருவருக்கு பழைய நோட்டுகளை மாற்றிக் கொடுத்து வந்துள்ளர்.
 
எனவே, இவரை தொடர்பு கொண்ட ஒரு தொழிலதிபர் ரூ.1 கோடியை அவரிடம் கொடுத்துள்ளார். அதில், ரூ.64 லட்சத்தை மட்டும் புதிய நோட்டாக சந்திரன் மாற்றிக் கொடுத்து விட்டார். மீதி ரூ.36 லட்சத்தை அவருக்கு திருப்பி தராமல் கடந்த 3 மாதங்களாக இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த அந்த தொழில் அதிபர், சென்னை கமிஷனர் அலுலகத்திற்கு சென்று, உயர் அதிகாரிகளிடம் இதுபற்றி முறையிட்டார்.
 
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இன்ஸ்பெக்டர் சந்திரன் பலருக்கு இதுபோல் பணத்தை மாற்றிக் கொடுத்து, கமிஷன் பெற்றிருப்பது தெரிய வந்தது. எனவே, அவர் தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
 
ரூபாய் நோட்டு விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ஒருவரே சிக்கியுள்ளது, சென்னை போலீசார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :