அன்று அடித்து விரட்டிய ஓ.பி.எஸ்.; இன்றைக்கு பரிதாபம்: அரசியல் ஆட்டம்


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (18:11 IST)
அன்று ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்களை அடித்து விரட்டிய ஓ.பன்னீர்செல்வம் அரசு, இன்று பொதுமக்கள் சசிகலாவுக்கு எதிராக கண்டனங்களை தெரிவிப்பதற்கு ஆதரவு தெரிவித்து காவலதுறையினர் எதுவும் செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுக்கிறார்.

 

 
சசிகலா தரப்பினர் ஆட்சி தமிழகத்தில் அமைவதை பொதுமக்கள் யாரும் விரும்பவில்லை. இதனால் ஆங்காங்கே மக்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று ஓ.பி.எஸ். ஆதாரவாளர்கள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டை முற்றுகையிட்டனர். பொதுமக்கள் இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 
 
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
 
தமிழக மக்கள் தாங்கள் விரும்பாத ஆட்சி அமைவதை கண்டித்து யாருக்கும் எவ்வித இடையூறு இல்லாமல் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அப்பாவி பொது மக்கள் தங்களது வேதனைக் குரலை வெளிப்படுத்துவதற்கு வேறு வழி தெரியவில்லை. கைது செய்தவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், என காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அன்று ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்திலும் இதேதான் நடந்தது. யாருக்கும் எவ்வித இடையூறு இல்லாமல் தான் போராட்டம் நடந்தது. அன்றும், இன்றும் அரசை கண்டித்துதான் போராட்டம் நடைப்பெறுகிறது. ஆனால் அன்று அடித்து விரட்டிய ஓ.பி.எஸ். இப்போது ஆதரவு தெரிவித்து வருகிறார்.
 
அவருக்கு ஆதரவாக பேசினால் மட்டும்தான் ஆதரவு தெரிவிப்பாரா? அல்லது அவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளாரா? எல்லாவற்றையும் தாண்டி அவரும் எல்லோரையும் போல் ஒரு அரசியல்வாதி என்பதை நீருபித்து வருகிறார்.
 
அதை புரிந்து கொள்ளாமல் சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவது மீண்டும் ஊழல் அரசியலை ஊக்குவிப்பதற்கு வழியாக அமைகிறது. ஊழல் குற்றவாளி என்று நீருபிக்கப்பட்ட ஜெயலலிதா ஆட்சி தொடரும் என ஆதிமுக கட்சியினர் வெளிப்படையாக கூறுவது ஊழல் தொடரும் என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :