Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அவனியாபுரத்தில் போராட்டம் - தடியடி: இயக்குனர் கௌதமன் கைது!

அவனியாபுரத்தில் போராட்டம் - தடியடி: இயக்குனர் கௌதமன் கைது!

சனி, 14 ஜனவரி 2017 (12:17 IST)

Widgets Magazine

மதுரை அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகே இயக்குனர் கௌதமன் உட்பட இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். போராட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்கு பின்னர் கவல்துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்ய தடியடி நடத்தினர்.


 
 
இயக்குனர் கௌதமன் உள்ளிட்ட இளைஞர்கள் 200 பேர் அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவும், பீட்டா அமைப்பிற்கு தடைவிதிக்கவும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
 
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். கைது நடவடிக்கைக்கு மறுப்பு தெரிவித்து போலீசாருடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.
 
இயக்குனர் கௌதமன் கைது செய்யப்பட்டார். அவரது கன்னத்தில் காயம் ஏற்பட்ட இரத்தம் வடிந்தவாறு இருந்தது. மேலும் போராட்டக்காரகள் மீது தடியடி நடத்தி அவர்கள் ஒவ்வொருவரும் கைது செய்யப்பட்டனர்.
 
போராட்டக்கார்கள் மீது தடியடி நடத்தப்பட்டதால் அந்த பகுதி மிகவும் பதற்றமாக காணப்படுகிறது. அவனியாபுரம் மட்டுமல்லாமல் மதுரையின் பல பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

இன்று முதல்வர் பன்னீர்செல்வம் பிறந்த நாள்: இப்படியும் ஒரு முதலமைச்சர்!

தமிழகம் முழுவதும் மக்கள் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஆனால் இன்று முதல்வர் ...

news

ஜல்லிக்கட்டு விவகாரம்: மௌனம் கலைத்தார் ரஜினிகாந்த்!

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்துவது பற்றி தான் ஒரே பேச்சாக உள்ளது. கடந்த இரண்டு ...

news

பீட்டாவை டுவிட்டரில் விளாசிய குஷ்பூ: வாலண்டியராக வந்து சிக்கியது!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது, ஜல்லிக்கட்டின் போது மாடுகள் துன்புறுத்தப்படுகிறது ...

news

தான் யாருடைய மகன் என்பதை நிரூபிக்க கால அவகாசம் கேட்ட நடிகர் தனுஷ்!

பிரபல நடிகர் தனுஷ் தங்கள் மகன் என சில மாதங்களுக்கு முன்னர் மதுரையை சேர்ந்த கதிரேசன் , ...

Widgets Magazine Widgets Magazine