Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு: பெண்ணிடம் காவல்துறையினர் அட்டூழியம்


Abimukatheesh| Last Updated: திங்கள், 9 ஜனவரி 2017 (14:17 IST)
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் பெண் ஒருவரை துன்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து அந்த பெண் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கரிடம் புகார் அளித்தார்.

 

 
இன்று காலை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்து முன்பதிவை தொடக்கி வைத்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் செய்தியாளர்கள் இடையே பேசிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு பெண், காவல்துறையினர் தன்னை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக புகார் அளித்தார்.
 
அமைச்சர் இதுசார்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் அந்த இடத்தை விட்டு எழுந்துச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அந்த பெண் கூறியதாவது:- 
 
நாம் சற்று மயக்கம் காரணமாக படுத்து இருந்தேன். பெண் காவலர்கள் என்னிடம் வந்து யார் என்று விசாரித்தனர். எனக்கு சற்று மயக்கமாக உள்ளது, சிறிது நேரத்தில் எழுந்து சென்றுவிடுவேன் என்றேன். நான் ஆராய்ச்சி மாணவி. நான் பெங்களூரில் இருந்து சைதாபேட்டைக்கு ஒரு வேலையாக வந்தேன். 2 பெண் காவலர் மற்றும் 2 ஆண் காவலர்கள் இருந்தனர். என்னை காவல் நிலையத்துக்கு நட என்றனர். விசாரனை என்ற பெயரில் என்னை துன்புறுத்தினர். லத்தியால் என்னை அடித்தனர். சந்தேகத்தின் பெயரில் கேட்கிறோம் என்றனர். காலை 7.00 மணிக்கு இந்த சம்பவம் நடைப்பெற்றது.
 
ஒரு பெண் சுதந்திரமாக நடந்து செல்ல முடியவில்லை. நான் இதை கண்டிக்கிறேன், என்று கூறினார். 


இதில் மேலும் படிக்கவும் :