Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பொன். ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீச்சு - சேலத்தில் பரபரப்பு

வியாழன், 16 மார்ச் 2017 (11:30 IST)

Widgets Magazine

டெல்லி ஜவகர்ஹால் நேரு பலகலைக்கழக மாணவர் முத்துகிருஷ்னன் சமீபத்தில், அவர் தங்கியிருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. 


 

 
அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களும், அவர் தற்கொலைதான் செய்து கொண்டுள்ளார் என அறிக்கை அளித்தனர். ஆனால், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என முத்துகிருஷ்ணனின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இந்நிலையில், அவரின் உடல் நேற்று டெல்லியிலிருந்து அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் அரிசிபாளையத்திற்கு எடுத்து வரப்பட்டது. அவருக்கு அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று சேலம் வந்தார். ஆனால், அவருக்கு சில மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். 
 
அந்நிலையில், முத்துகிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவர், செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் மீது யாரோ செருப்பை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த போலீசார், அவர் மீது காலணி வீசிய ஒருவரை பிடித்து சென்றனர். 
 
முத்துகிருஷ்ணன்  தற்கொலை தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் என அவர் பேட்டியளித்தார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் செந்தில் பாலாஜி - எம்.எல்.ஏ கூட்டத்தில் நடந்தது என்ன?

கரூர் தொகுதி எம்.எல்.ஏவான செந்தில் பாலாஜி தனக்கு அமைச்சர் பதவி வழங்காத அதிமுக தலைமை மீது ...

news

எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 4 பேர் மிஸ்சிங் ; அரசுக்கு ஆபத்தா? - அதிர்ச்சியில் அதிமுக

பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 4 எம்.எல்.ஏக்கள் கலந்து ...

news

செவிலியரை உயிருடன் எரித்து கொன்ற நோயாளி!!

70 வயது மதிக்க தக்க நோயாளி ஒருவர் தன்னை பார்த்துக்கொள்ள பணி அமைக்கப்பட்டிருந்த செவிலியரை ...

news

தமிழக பட்ஜெட் 2017-18 - உடனுக்குடன்

தமிழக சட்டப்பேரவையில் 2017-18ம் ஆண்டிற்கான பட்ஜெட், சட்டசபையில் நிதியமைச்சர் ...

Widgets Magazine Widgets Magazine