1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 28 மே 2016 (23:47 IST)

நியாயவிலைக் கடையில் “பாயின்ட் ஆப் சேல்” என்ற கருவி அறிமுகம்

நியாயவிலைக் கடைகளில் முறைகேடுகளை தடுக்க “பாயிண்ட் ஆப் சேல் என்ற புதிய கருவியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.


 
தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் விதத்தில் தமிழக அரசு புதிய அதிநவின கருவியை அறிமுகம் செய்துள்ளது.
 
இந்த கருவியில் அனைத்து குடும்ப அட்டைகளின் விவரங்களும் பதிவு செய்யப்படுவதுடன் நியாயவிலைக் கடையின் பொருடகளின் விவரங்களும் பதிவாகிவிடும். இதையடுத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருள்கள் விபரம், அளவு, விலை, மொத்த தொகை, இன்னும் என்னென்ன பொருட்கள் வாங்காமல் பாக்கி யுள்ளது போன்ற விபரங்கள் உடனடியாக அவர்களது கைபேசிக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். 
 
மேலும், இந்த கருவி மூலம் கடையின் கையிருப்பு, தினசரி விற்பனை போன்ற விவரங்களை உயரதி காரிகள் நேரடியாக அறிந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஜூலை 1-ம் தேதி முதல் இந்த கருவியின் பயன்பாடு முழுமையாக கொண்டுவரப்பட உள்ளது.