சட்டமன்ற தேர்தல்; 27ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும்: ராமதாஸ் அறிவிப்பு


Murugan| Last Modified செவ்வாய், 19 ஜனவரி 2016 (14:16 IST)
வருகிற சட்ட மன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் வருகிற 27ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் கொடுக்கலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

 
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயாராகி விட்டது.
 
இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை விரைந்து வெளியிடுவதற்கு வசதியாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் 27 ஆம் தேதி புதன்கிழமை முதல் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன.
 
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் ஜனவரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10.00மணி முதல் மாலை 4.00 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்.
 
மனுவுடன் கட்டணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும். மனுக்கள் பெறப்பட்ட பின்னர் அவற்றை ஆய்வு செய்து, இரு மாநிலங்களிலும் போட்டியிட விண்ணப்பித்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :